கிழக்கு அகழ்வாராய்ச்சி ஜனாதிபதி செயலணிக்குள் அததெரண உரிமையாளர் திலித்
சர்ச்சைக்குரிய வர்த்தகரும், தனியார் ஊடக வலையமைப்பு ஒன்றின் உரிமையாளருமான திலித் ஜெயவீரவும் கிழக்கு மாகாண அகழ்வாராய்ச்சி முகாமை தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஜனாதிபதி செயலணிக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதம சங்கநாயக்கர்கள், தம்மன்கடுவ சிரேஷ்ட சங்கநாயக்கர், ஆரிசிமலை பிரதம பௌத்தகுரு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அகழ்வராட்சி பணிப்பாளர் நாயகம் சேனரத் பண்டார திஸாநாயக்க, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், களனி பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் குமார் சோமதேவ, பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவத்துறை பேராசிரியர் கபில குணவர்த்தன, மேல் மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், மாகாண காணி ஆணையாளர் ஜி திசாநாயக்க, தனியார் ஊடக அமைப்பொன்றின் தலைவர் திலித் ஜெயவீர ஆகியோரின் பெயர்கள் இந்த செயலணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செயலணி, கிழக்கு மாகாணத்தில் அகழ்வாராய்ச்சிக்குரிய இடங்களை அடையாளம் கண்டு உரிய முகாமைத்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.
அத்துடன் அந்த இடங்களின் கலாச்சார பெறுமதியை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பிரசித்தப்படுத்தவுள்ளது.
Post a Comment