சீனாவுடன் பேரம் நடந்ததால் முஸ்லிம்களை முகாமில் அடைத்ததற்கு தடைவிதிக்கவில்லை - டிரம்ப்
வணிக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்ததால் சீனாவின் வீகர் முஸ்லிம்கள் நன்னடத்தை முகாம்களில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் சீன அதிகாரிகளுக்கு மேற்கொண்டு புதிய தடை எதையும் விதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
பிரச்சனையில் சீன அதிகாரிகளுக்கு மேற்கொண்டு எந்த தடையும் விதிக்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைக்ப்பட்டுள்ள பிரும்மாண்டமான நன்னடத்தை முகாம்களில் சுமார் 10 லட்சம் வீகர் முஸ்லிம்களும், பிற சிறுபான்மை இனத்தவரும் அடைத்துவைக்கப்பட்டு, பலவந்தமாக அவர்கள் வாழ்க்கை முறை மாற்றப்படுகிறது.
அவர்களுக்கு அங்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை என்று கூறும் சீனா, அவர்ளை நல்வழிப்படுத்துவதாகக் கூறுகிறது. ஆனால், இது குறித்து சர்வதேச சமூகங்கள் சந்தேகம் எழுப்புகின்றன.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து பதவி விலகிய ஜான் போல்டன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில், ஜின்ஜியாங் மாகாண நன்னடத்தை முகாம்கள் அமைப்பது சரியான செயல் என்று ஒரு உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங்குக்கு டிரம்ப் நற்சான்றிதழ் வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் விவகாரத்தின் ஆரம்பப்புள்ளி.
இந்த நிலையில், ஆக்சியாஸ் செய்தி தளத்திற்கு அளித்த நேர்காணலில், “மிகப்ப பெரிய வணிகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் நாம் மேற்கொண்டு தடைகளை விதித்துக் கொண்டே போக முடியாது. ஏற்கெனவே நான் இறக்குமதி வரியை உயர்த்திவிட்டேன். தடை விதிப்பதைவிட இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது,” என கூறி உள்ளார்.
அமெரிக்க விவசாய விளைபொருள்களை வாங்கி, அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற உதவும்படி சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் கேட்டீர்களா என்ற கேள்விக்கு, “இல்லவே இல்லை. சீன அதிபரிடம் மட்டும் அல்ல. நான் நம் நாட்டுடன் வணிகம் செய்ய சொல்லி அனைவரிடமும் கேட்கிறேன். நம் நாட்டுக்கு எது நல்லதோ அதுதான் எனக்கும் நல்லது,” என்று கூறி உள்ளார்.
BBC
Post a Comment