பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி
மொனராகலை, இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதன்போது, சந்தேக நபர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பரஸ்பரம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர், மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
31 வயதுடைய குறித்த சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 31ஆம் திகதி மொனராகலை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
Post a Comment