ஜனாதிபதி கோட்டாபயவை நெகிழ்ச்சியால் திணறவைத்த சிறுமி
கொரோனா தொற்றில் நாட்டை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டி அதற்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் சிறுமி ஒருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
தனது கடிதத்திற்கு மேலதிகமாக கொரோனா நிதியாக சேகரித்த பணத்தையும் அதனுடன் அனுப்புவதற்கு சிறுமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த கடிதம் ஜனாதிபதியிடம் சென்றவுடன் தனது பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு அவரது நன்றியை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கடிதத்திற்கு பதிலாக பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில்,
அன்புக்குரிய ரொஹன்ஸா மகளுக்கு எழுதும் கடிதம்,
மகள், நாட்டின் எதிர்கால சந்ததி என்ற ரீதியில் எனது சேவையை பாராட்டியமைக்கு நான் முதலாவதாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்பை கொரோனா நிதிக்கு அனுப்பியமை குறித்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். உங்களைப் போன்ற இலங்கை குழந்தைகளுக்கு எங்கள் தாய்நாடு ஒப்படைக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி அதிகாரத்தை உங்களை போன்ற தேசபக்தி கொண்ட எதிர்கால சந்ததிக்கு வாழ கூடிய பொருத்தமான சமூகத்தையும், பொருளாதாரத்தையும், கலாச்சார ரீதியாக முன்னேறிய நாட்டை உருவாக்க பயன்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன். குழந்தைப் பருவம் என்பது நம் வாழ்வின் மகிழ்ச்சியான காலங்களில் ஒன்றாகும். அதனை கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்த பயன்படுத்தி, இலங்கையின் பெயரை உயர் மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய புதுமைகளை நீங்கள் தேட வேண்டும். உங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கு எனது ஆசிர்வாதத்தை வழங்குகின்றேன்.
நாம் எங்கள் நாட்டை நேசிப்போம். எங்களுக்கு வரும் அனைத்து தடைகளையும் ஒன்றாக இணைந்து வெற்றிக் கொள்வோம். என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
May allah giide our president right path n love each n every citizens in the country.
ReplyDelete