இலங்கையில் ஜனாஸா எரிப்பு விடயத்தில், கவனம் செலுத்தியதாக பிரிட்டன் Mp தெரிவிப்பு
இலங்கை முஸ்லிம்களுக்கான பிரத்தியேக கலந்துரையாடல் ஒன்று 07/06/20 , ஞாயிறன்று Zoom செயலி ஊடாக Covid-19 பாதிப்புகளும், எவ்வாறு மீளலும் என்ற கருப்பொருளில் இடம்பெற்றது.
SLMS-UK அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நேரடி நிகழ்வில் தொழில்கட்சியின் கிழக்கு லெஸ்டர் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் ( Labour MP for Leicester East) Claudia Webbe பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு ,
SLMS-UK அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நேரடி நிகழ்வில் தொழில்கட்சியின் கிழக்கு லெஸ்டர் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர் ( Labour MP for Leicester East) Claudia Webbe பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு ,
1. சிறார் பாதுகாப்பும் பெற்றோர் உரிமைகளும்
2. பொருளாதார உதவிகள்
3. சுயதொழில் மற்றும் வியாபாரம்
4. எதிர்கால சமூக, பொருளாதார விளைவுகள்.
என்பன போன்ற விடயங்களை விரிவாக விளக்கினார்.
அத்தோடு கல்வி, வியாபாரம், இறக்குமதி, வரிகள், தொழில்நுட்பம், வீட்டு வாடகை, வீசா கட்டுப்பாடுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாணவர் கடன், சிறு தொழில் புரிவோர் மற்றும் டெக்ஸி ஒட்டுனர், அரசாங்க உதவிகள் , பொருளாதார பின்னடைவுகள் போன்ற கேட்கப்பட்ட பல இன்னோரன்ன கேள்விகளுக்கு துல்லியமாகவும் , விபரமாகவும் விடையளித்ததுடன அரசு செயல்படுத்தும் உதவித்திட்டங்களையும் விளக்கினார்..
இறுதியாக , இத்தொகுதியில் செரிவாக வாழும் இலங்கை முஸ்லிம்களாகிய எம்மால் தாயக உறவுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக எவ்வாறான தாக்கங்களை , அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என வினவப்பட்டபோது அதற்காக தன்னாலான முழு முயற்சிகளையும் , ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்ததோடு அண்மையில் ஜனாஸா எரிப்பு விடயம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது அதற்கெதிராக தான் எடுத்த முயற்சிகளையும் விபரித்தார்.
இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
Media Unit
SLMS-UK
Media Unit
SLMS-UK
Post a Comment