9 வயதான உவைஸ், என்ன தவறு செய்தான்..?
9 வயதான உவைஸ், வீடுகளில் இருக்கும் ஐந்து ஜன்னல்களின் வெளிச்சம் கண்ணில் பட்டுவிடக் கூடாது என பெரிய போர்வையில் தன்னை எப்போதும் போர்த்தியவாறு படுத்திருக்கிறான். கண்ணுக்கு மருந்திட வேண்டும் என அவன் அப்பா ஃபயாஸ் போர்வையை நகர்த்தி எழுப்ப முயன்றால்,” போர்வையை எடுக்காதீர்கள். என்னால் வெளிச்சத்தை பார்க்கமுடியவில்லை. வெளிச்சம் படப்பட என் வலி அதிகரிக்கிறது. தயவு செய்து என்னை விடுங்கள்” என்று அலறி விட்டு போர்வைக்குள் சென்று விடுகிறான்.
உவைஸின் அம்மா ஆமினா சொல்லும் போது, இராணுவத்தினர் நடத்திய அந்த தாக்குதலுக்கு பிறகு என் மகனது கண் மட்டுமல்ல அவனது மனதும் பெரிதளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கு அவனே அதிகமாக கோவப்படும் சிறுவனாக மாறிவிட்டான். இரவில் தீடிரென எழுந்து இராணுவத்தினர் தாக்குவதாக கூறி அழுது கொண்டே இருக்கிறான். என் மகனை எங்களால் இந்த நிலையில் பார்க்க முடியவில்லை என்று அந்த தாய் அழுகிறார்.
இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்க வெறும் ஒன்பது வயதான உவைஸ் என்ன தவறு செய்தான்?.. அதுவும் துப்பாக்கி ஏந்தி கொண்டு பெல்லட் குண்டுகளால் குறி வைத்து கண்ணில் தாக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தான்?..
அதற்கு பதில், அருகிலிருக்கும் பகுதிக்கு குளிக்க சென்றிருந்தான். ஆம், காஷ்மீரில் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் வீட்டுக்கு திரும்பும் போது அதே நிலையில் திரும்புவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுவன் உவைஸே கூறுகிறான், ” அன்று அருகில் குளிப்பதற்காக சென்றிருந்தோம். திடீரென சத்தம் வந்ததும் அங்கே இராணுவத்தினர் இருந்தனர். எதிர்தரப்பில் இராணுவத்தினரின் சோதனையை எதிர்த்து கற்களை வீசினார்கள். நான் வேறு புறம் ஓடி வந்து விட்டேன். ஒரு மசூதிக்கு வெளியே வந்து நிற்கும் போது இராணுவத்தினர் எனக்கு மிக நெருக்கமாக இருப்பது தெரிந்தது. எனக்கு அருகே வந்த இராணுவ வீரர் எனது கண்ணில் வேகமாக சுட்டார். அவ்வளவுதான்.”
உவைஸுக்கு இதுவரை நான்கு அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறது. உவைஸ் அடிபட்ட போது அவரது அப்பா ஃபயாஸ் உட்பட கிராமத்திலிருந்த பலர் இராணுவத்தின் பிடியில் இருந்தனர். இராணுவத்தினரால் கிராமம் முழுக்க வீடு வீடாக சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையின் காரணமாகவே உவைஸுக்கு மருத்துவம் கிடைக்கவும் இரண்டு மணி நேரங்கள் தாமதமானது.
உவைஸை போல காஷ்மீரில் சிறுவர்களை வீதிக்கு வீதி காண முடியும். இந்த சிறு வயதில் உவைஸின் கண்களில் இரண்டு மெட்டல் பிளேட் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.
காஷ்மீர் ஒரு துயரத்தின் பூமி.
SOURCE: KASHMIRWALLA 02.06.2020
- News Aram
Post a Comment