ஜனாசா எரிப்பு விவகாரம் - 8 அடிப்படை மனித உரிமைமீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு
கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா அவர்களினால் உயர் நீதி மன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று -08- விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் அலிஸாஹிர் மௌலானாவின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் ஆஜராகி, தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
இம்மனு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையை அவதானிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், , முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்டோர் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தனர்.
கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு உட்பட மற்றும் சிலரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
ReplyDelete(அல்குர்ஆன் : 3:178)
www.tamililquran.com
எவர் ஒருவர் நடுநிலையுடன் நின்று தனது மக்களுக்காக பின்விளைவுகளை எதிர்பாராது ஆகக்குறைந்தது தனது பேச்சால் அவரகளைப் பாதுகாக்க முற்படுகின்றாரோ அவரையும் அவரது குடும்பத்தினரையும் காப்பதற்கு இறைவன் பொறுப்பெடுத்துக் கொள்கின்றான். எவர் ஒருவர் தான் செய்வது அநியாயம் என்று தெரிந்தும் அதனை வலிந்து செய்கின்றாரோ அதன் விளைவுகளை அவர் பரிதாபமாக மரணிக்குமுன் அனுபவித்தே தீருவார். இவற்றிற்கு ஆயிரக்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
ReplyDeletePlease submit Mumbai High court ruling on Janaza on the inquiry that will make the case more strong. WHO guidelines were made by health experts in the world but in Sri Lanka JMO Dr. Anil Jayasinghe is not an expert on virus matter.
ReplyDelete