கடந்த 7 வாரங்களாக சமூகத்திலிருந்து கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை
கடந்த 7 வாரங்களாக சமூகத்திலிருந்து கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் மாத்திரமே கொரோன தொற்று உறுதி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1991 ஆக பதிவாகியுள்ளது.
Post a Comment