மெக்சிக்கோவில் 7.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மெக்சிக்கோவின் ஓக்சாகா நகரில் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, கட்டிடங்கள் குலுங்கின. நகரின் கட்டங்களுக்குள் இருந்த மக்கள் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி வீதிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களோ அல்லது உயிரிழப்புகளோ உடனடியாக வெளிவரவில்லை. இதேவேளை, குறித்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment