தென்கொரியாவில் 7 நாட்களில், 3 இலங்கையர்கள் மரணம் - உடல்களை அனுப்புவதில் தாமதம்
- Rajeevan Arasaratnam -
ஒரு வார காலப்பகுதியில் தென்கொரியாவில் கொலை உட்பட பலகாரணங்களால் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என தென்கொரியாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
கொலை, தற்கொலை மற்றும் விபத்து காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
கொவிட் 19 காரணமாக விமானப்போக்குவரத்துகள் பாதிக்கப்படடுள்ளதால் உயிரிழந்தவர்களின் உடல்களை இலங்கைக்கு அனுப்புவதில் ஏற்படும் தாமதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் வேலைவாய்பபு அனுமதிப்பத்திர முறையின் கீழ் குறைந்த திறன் வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஒருவர் தென்கொரியாவில் உள்ள பிரபலமான இலங்கை இசைக்குழுவின் உறுப்பினர் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தங்களை பற்றியும்; குடும்பங்கள் பற்றியும் பல விதமான கனவுகளுடன் தென்கொரிய வந்த இலங்கையர்களின் மரணம் துயரமானது என தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment