6 முக்கிய நிபந்தனைகளுடன், கத்தாரில் ஜூன் 15 முதல் இறையில்லங்கள் திறக்கப்படுகிறது
கத்தாரில் மஸ்ஜித்களை திறக்க கத்தார் அவ்கஃப் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கையாண்டு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி மஸ்ஜித்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐவேலை தொழுகை (ஜும்ஆ தொழுகை தவிர்த்து) மற்றும் அரசினால் அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மஸ்ஜித்களில் மாத்திரமே தொழுகை நடாத்தப்படும்.
அனுமதி அளிக்கப்பட்ட மஸ்ஜித்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும், கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
1. அதான் அழைப்பதற்கு முன்னதாக மஸ்ஜிதுல் செல்ல முடியாது.
2. ஒவ்வொருவருக்கும் இடையில் 2 மீட்டர் இடைவெளி பேனப்பட வேண்டும்.
3. கைகுலுக்கள் மற்றும் கட்டிப்பிடித்தல் முற்றாக தடை.
4. முகக்கவசம் அணிதல் கட்டாயம்.
5. தத்தமது குர்ஆன் மற்றும் விரிப்பு (முசல்லாஹ்) எடுத்த வர வேண்டும். விரிப்பினை எவரிடமும் பகிர்ந்துக் கொள்ளக்கூடாது.
6. மஸ்ஜிதினுல் நுழையும் முன் இஹ்திறாஸ் (Ehteraz) ஆப் இணை காண்பித்தல் வேண்டும்.
CWF QATAR
CWF QATAR
அப்போ ஸ்மார்ட்போன் இல்லாதவங்க மஸ்ஜிதினுள் நுழைய முடியாது. அப்படிதானே.
ReplyDelete(Condition 6)