முத்தலிபை கண்டு நடுங்கிய பிரபாகரன், போர் வெற்றிக்கு பங்காற்றி மக்களின் உள்ளங்களில் வாழும் வீரன்
" கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நான் இருக்க வில்லை என்றால் என்னைத் தேட வேண்டாம். அவசரமாக வந்து விடுவேன்." என்று தனது இராணுவ அணிக்கு சொல்லிவிட்டு நடு இரவில் செல்லும் முத்தலிப் மீண்டும் விடியும் நேரத்தில் தனது அணியில் வந்து இணைந்து கொள்வார். தனது கைத் துப்பாக்கியை தலையணைக்கு கீழ் வைத்து ஒரு குழந்தையைப் போல தூங்கிவிடுவார்.சிறிது நேரத்திற்கு பிறகு தனக்கு கீழ் சேவை செய்யும் இராணுவத்தினருக்கு குறிப்பிட்ட இடத்தில் புலி பயங்கரவாதிகளின் சடலங்கள் இருக்கும் ; அவற்றை எடுத்து வாருங்கள் என்று கட்டளையிடுவார். சில நாட்களில் அவ்வாறு 10-15 சடலங்களைக் கூட எடுத்து வந்த சந்தர்ப்பங்கள் காணப்பட்டதாக அவருடன் பணிபுரிந்தவர்கள் கூறுகின்றனர்.
புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தமிழ்ச் செல்வன் பயணித்த வாகனத்திற்கு ஒரு தாக்குதல் , கேர்ணல் கருணா , ஜெயம் , பால்ராஜ் போன்றோரை இலக்கு வைத்து தாக்கியமை , கேர்ணல் சால்ஸ் மற்றும் வெலியன் உட்பட ஒரு தீவிரவாத குழுவை சுற்றிவளைத்து அழித்தமை , கடற்புலி தலைவர் காந்தி அமரனை முல்லைத்தீவு கடலில் கொலை செய்தமை , புலி விமானப் படையின் நிர்மாணி வயிதலிங்கம் சோதிலிங்கம் போன்றோரை கொலை செய்த காரணத்தினால் பிரபாகரன் உட்பட புலி தலைவர்களுக்கு முத்தலிப் பற்றிய ஒரு அச்சம் காணப்பட்டது. மேலே குறிப்பிட்ட தாக்குதல் அனைத்தும் முத்தலிப் கட்டளையிட்ட மகாசோன் படையணி மூலம் என்பதை புலித்தலைவர்கள் அறிந்திருந்தார்கள்.
இதனால் முத்தலிப்பை இராணுவ களத்திலிருந்து மாத்திரமல்ல, உலகத்திலிருந்தே வெளியேற்ற வேண்டிய தேவையை பிரபாகரன் கடுமையாக உணர்ந்தார்.
1966 ஜுன் மாதம் 12 ஆம் திகதி களுபோவிலவில் மெலே முஸ்லிம் குடும்பத்தில் முத்தலிப் பிறந்தார். தெஹிவளை பிரதேசத்தில் வளர்ந்த அவர் கொழும்பு டீ.எஸ் .சேனாநாயக்க பாடசாலையில் கற்றார்.
முத்தலிப் மாணவ பருவத்தில் கல்வியிலும் விளையாட்டிலும் மிகவும் திறமையான மாணவனாக காணப்பட்டார். பாடசாலை ரகர் அணியிலும் இடம்பிடித்தார். இல்ல விளையாட்டு போட்டிகளிலும் திறமையை வெளிக்காட்டினார். சிங்கள இலக்கிய நிகழ்வுகளில் பேசினார். எனினும் மிகவும் குறும்புத்தனமானவர் என்ற வகையில் பாடசாலையின் சட்டதிட்டங்களை மீறி பல தடவைகள் குற்றவாளி பட்டத்தையும் பெற்று இருக்கிறார்.
பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்தார். 1986 இல் இராணுவத்தில் இணைந்தார். அவருடைய திறமைகள் காரணமாக படிப்படியாக உயர் பதவிகளுக்கு சென்றார்.
1987 இல் 4 வது கெமுனு படையணியில் இணைந்து வடமராட்சி போரில் பங்குபற்றினார். 1992 இல் கெப்டன் நிலையை அடைந்தார்.1995 இல் மேஜர் நிலையை அடைந்தார்.
தனது இராணுவ சேவை காலத்தில் பெரும்பகுதியை வட - கிழக்கில் புலனாய்வுத் துறையிலேயே மிகவும் திறமையாக பணிபுரிந்தார்.
முத்தலிப் பாகிஸ்தான், பங்களாதேஷ் , ஹவாய், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் புலனாய்வு தொடர்பான உயர்ந்த பயிற்சிகளை பெற்றவர்.
அவர் செய்த சேவைகளுக்காக,
01. ரண விக்ரம பதக்கம்
02. இலங்கை இராணுவ நீண்ட சேவை பதக்கம்
03. வட கிழக்கு நடவடிக்கை பதக்கம்.
04. பூர்ண பூமி பதக்கம்.
05. வடமராட்சி நடவடிக்கை பதக்கம்
06. ரிவிரெச நடவடிக்கை பதக்கம் ஆகிய கௌரவங்களைப் பெற்றுள்ளார்.
இராணுவத்தின் நீண்ட தூர நடவடிக்கை அணி ( LRRP) ஆரம்பிக்கப்பட்டு அந்த அணி ஊடாக புலனாய்வு நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அந்த அணியின் கட்டளையிடும் அதிகாரியாக முத்தலிப் செயற்பட்டார். அப்பொழுது அவர் சேவை செய்த விதம் பற்றியவையே மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்களாகும்.
அவருடைய மனைவியும் இராணுவத்தை சேர்ந்த மேஜர் குமுதுனி அமரசிங்க ஆவார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் மலிக் அடுத்தவர் சாரா ஆவார். பிற்காலத்தில் முத்தலிப் கொழும்பில் புலனாய்வுத் துறையில் ஒரு கட்டளையிடும் அதிகாரியாக பணியாற்றினார்.
இவருடைய நடவடிக்கைகள் காரணமாக புலித்தலைவர்கள் அச்சம் அடைந்து காணப்பட்டனர். புலித்தலைவர்களின் கூட்டங்களில் முத்தலிப் உடைய பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. பிரபாகரன் கூட முத்தலிப் என்ற பெயர் காரணமாக குழப்பம் அடைந்து காணப்பட்டார். அதனால் புலிகள் முத்தலிப்பை கொலை செய்ய திட்டமிட்டனர்.
ஒருமுறை தன்னை கொலை செய்ய வந்த தற்கொலைதாரி ஒருவருடைய மனதை மாற்றி புலிகளுக்கு எதிராகவே அந்த புலி அங்கத்தவரை செயற்பட வைத்தார். அதனால் இராணுவத்தினர் அவரை "திறமையாக மூளைச் சலவை செய்பவர்" என்ற புனைப்பெயர் வைத்தனர்.
அவருக்கு காணப்பட்ட புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அவரை கொழும்புக்கு இடம் மாற்றம் செய்தனர்.
2001 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவுடைய காலப்பகுதியில் மிலேனியம் சிட்டி சம்பவம் இடம்பெற்றது. இந்த நிகழ்வு காரணமாக இலங்கை இராணுவத்தினரின் புலனாய்வுப் பிரிவு தொடர்பான இரகசியங்கள் புலிகளுக்கு மாத்திரமல்ல, உலகுக்கே தெரிய வந்தது. இந்த நிகழ்வு தான் முத்தலிப்புடைய மரணத்திற்கு உடனடி காரணம் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது.
முத்தலிப் உடைய மனைவி உளவள ஆலோசனை பாடநெறியை பூர்த்தி செய்து யுத்தம் மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள ஆலோசனை வழங்கும் பணியை செய்தார்.
முத்தலிப்பிடமும் கற்கும் தாகம் எப்பொழுதும் காணப்பட்டது. ரத்மலானையில் பாதுகாப்பு பிரிவின் கணனி கற்கைநெறி ஒன்றுக்கு செல்பவராக இருந்தார்.
வடக்கில் இருந்த புலி பயங்கரவாதிகள் முத்தலிப்புடைய அன்றாட நடவடிக்கைகளை அவதானித்து வந்தனர்.
2005 மே மாதம் 31 ஆம் திகதி கணனி வகுப்புக்கு செல்வதற்காக நாராஹேன்பிட்ட மாதா பாதையில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து தனது அரச வாகனத்தில் பயணத்தை ஆரம்பித்தார். அவருடைய வாகன இராணுவ சாரதி ஹேரத் "அன்று எமது வாகனத்தில் நாராஹேன்பிட்டவிலிருந்து ரத்மலானைக்கு பயணத்தை ஆரம்பித்தோம். பொல்ஹேன்கொட எனும் இடத்தில் பல வாகனங்கள் எம்மை பின்தொடர்ந்து வருவதை அவதானித்தோம். நாம் வேகத்தை அதிகரித்தாலும் அவர்களிடம் இருந்து தப்பிச் செல்ல வழியில்லை என்பதை புரிந்து கொண்டோம்.
சேருடைய முகத்தில் எந்தவொரு பயத்தையும் நான் காணவில்லை. ஏனைய நாட்களை போல உடலை சீர்படுத்திக் கொண்டு தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து போராட தயாரானார். ஆனாலும் தீவிரவாதிகளின் குண்டு மழை சேரை பலியாக்கியது." என்று சாரதி ஹேரத் கூறினார்.
இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் 2005 மே முதலாம் திகதி லெப்டினன்ட் கேர்ணல் பதவியைப் பெற்றார்.மரணித்த பிறகு அவருக்கு கெளரவமாக சந்திரிக்காவின் அரசு கேர்ணல் பதவியை வழங்கியது.
இன்று அவர் மரணித்து 15 வருடங்கள் கடந்துவிட்டாலும் மக்களின் உள்ளங்களில் முத்தலிப் எனும் வீரன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
தமிழில் : சப்ராஸ் சம்சுதீன் + விடிவெள்ளி
முத்தலிப் என்ற முகத்திற்காகவாவது முஸ்லிம்களை எரிப்பதை அரசு நிறுத்த வேண்டும்.
ReplyDeleteayyo sunil
ReplyDeleteuseless news
dont you have any other news
Entertain article
ReplyDeleteமுத்தாலிப்பையிட்ட புலிகளின் தாக்குதல் அணித் தளபதிகள் அஞ்சினார்கள். புலிகளிம் புலனாய்வுப் பிரிவையிட்டு முத்தாலிப் அஞ்சினார் என்பதும் இயற்கை. ஆனால் பிரபாகரன் இயல்பு தெரிந்தவர்களுக்கு பிரபாகரன் அஞ்சினார் என்கிற கூற்று சிரிப்பையே வரவளைக்கும். புலிகளின் மாபெரும் வீரனான பால்ராஜ் புலளின் புலனாய்வுத்துறை உட்பட பலர் எச்சரித்தும் பொருட்படுத்தாமல்தான் நீண்ட காட்டு வீதியால் கழமுனைக்குச் சென்று கொலையுண்டார். முன்னணி இராணுவ வீரரான முத்தாலிப்பும் கணனி கல்விக்கு செல்வதுதொடர்பாக இலங்கை இராணுவத்தின் புலனாய்விப் பிரிவினால் எச்சரிக்கப்பட்டிருப்பார். பால்ராஜ் நான் மதிக்கும் அஞ்சாத போர்வீரர் எதிர் இராணுவ அணியாயினும் முத்தாலிப்பும் அஞ்சாத போர்வீரர். ”அஞ்சுவது அஞ்சாமை”தான் இருவரது மரணத்துக்கும் காரணம். தமர் பிறர் என்று பாராமல் இரண்டு போட்வீரர்களுக்கும் என் அஞ்சலிகள்.
ReplyDeleteஜப்னா முஸ்லீம் இதுமாதிரியான செய்திகளை பிரசுரிக்காதிருப்பதே ஆரோக்கியம்
ReplyDelete