உலக முஸ்லிம் லீக்கிடமிருந்து 5 மில்லியன், டொலர்களை நான் பெறவில்லை - மைத்திரி மறுப்பு
உலக முஸ்லிம் லீக்கிடம் இருந்து ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதாக கூறப்படும் விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்து ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக உலக முஸ்லிம் லீக், இலங்கைக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அளிப்பதாக உறுதிமொழி வழங்கியது.
கொழும்பு -நெலும் பொகுன அரங்கில் நடைபெற்ற அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய மாநாட்டின் போது உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் அப்போதைய ஜனாதிபதி சிறிசேனாவிடம் ஒப்படைத்த ஆவணங்களில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பணம் பெறப்பட்டதாகவும், பணத்திற்கு என்ன நடந்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், தாம் குறித்த நிதியை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், இது உலக முஸ்லிம் லீக்கினால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
உலக முஸ்லிம் லீக் கோரிய சில தகவல்களை இலங்கை வழங்க தவறியமையின் காரணமாக குறித்த நிதியை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
According to the last para it shows your failure to get aid.
ReplyDeleteஇணையத்தளத்தின் உள்நோக்கம் அம்பலமாகின்றது.
ReplyDelete