ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் 5 வருடங்களுக்குள் பிளவடைந்து சிதைந்து போய்விடும்
ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஐந்து வருடங்களுக்குள் பிளவடைந்து சிதைந்து போய்விடுமென தெரிவிக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற தேர்தல் மொட்டுக் கட்சிக்கே சாதகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொல்காஹாவலையில் (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்துவிட்டு, அவரை நிந்தனைச் செய்துக்கொண்டிருந்த எதிர்கட்சியினர் நான்கரை வருடங்களாக செய்த ஆட்சியில் அவர்களின் முகத்திரை கிழிந்துவிட்டதெனவும் தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்கள் ஆகும் முன்னர் அந்த அணியினர் பிளவுபட்டு அழிந்துவிடுமெனவும், அதனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்கு முகம்கொடுப்பது மொட்டுக் கட்சிக்கு இலகுவாக அமையுமெனவும் தெரிவித்தார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் எதனோல் கிங்,எதனோல் அரசன் எனப்படும் இந்த நபர் நாட்டு மக்களின் பணத்தையும், சொத்துக்களையும் சூறையாடி இந்த நாட்டு மக்கள் அனைவரையும் மதுபோதையர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருப்பவருக்கு இன்னும் இந்த நாட்டு மக்கள் பெறுமதியா அவர்களின் வாக்ைக வழங்கி போதைத் தொழிலையும் பொதுமக்களின் பணத்தைச் சூறையாட இன்னும் வாய்ப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வார்களா என்பதை அடுத்துவரும் தேர்தல் முடிவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDeleteஎதனோல் காரன்கள் அனைவரும் தோற்று சிதைவடைந்து மண்ணோடு மண்ணாகப் போக பிரார்்த்னை செய்வோம்.அதற்காக உழைப்போம்.
ReplyDelete