Header Ads



5000 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர்: சவேந்திர சில்வா


5000 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி கூறினார்.

இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1797 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 409 பேர் சமூகத்தில் இருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையை சேர்ந்த 836 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வௌிநாடுகளிலிருந்து வருகை தந்த 551 பேருக்கும் தொற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பூசா தனிமைப்படுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட இலங்கை கடற்படையை சேர்ந்த 25 பேர் இன்று அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 84 பேர் பூசா முகாமில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பூசா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் 249 பேர் இதுவரை அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.