Header Ads



5 ஆசனங்களுக்காக மட்டக்களப்பில் 304 பேர் போட்டி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் - 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 ஆசனங்களுக்காக கட்சிகளையும் சுயேந்நைக் குழுக்களையும் சேர்ந்த 304 பேர் போட்டியிடுவதாக மட்டக்களப்பு தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்புகளுக்கமைய நடைபெறவுள்ள இத்தேர்தலில் 4 இலட்சத்து 9 ஆயிரத்து 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது.

இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 809 வாக்காளர்களும், கல்குடாத் தொகுதியில் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 97 ஆயிரத்து 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் உள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 65,321 வாக்காளர்களும், காத்தான்குடி பிரிவில் 31,268 வாக்காளர்களும், மன்முனைப்பற்று ஆரையம்பதிப் பிரிவில் 24,428 வாக்காளர்களும், வவுனதீவுப் பிரிவில் 22,237 வாக்காளர்களும், ஏறாவூர் நகர் பிரிவில் 26,463 வாக்காளர்களும், ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரிவில் 23,092 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர் பற்று செங்கலடிப் பிரிவில் 28,893 வாக்காளர்களும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரிவில் 19,442 வாக்காளர்களும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரிவில் 18,518 வாக்காளர்களும், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை முஸ்லிம் பிரிவில் 19,984 வாக்காளர்களும், கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரிவில் 16,754 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரிவில் 16,337 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியடைந்துள்ளனர்.

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடிப் பிரிவில் 46,275 வாக்காளர்களும், போரதீவுப் பற்று வெல்லாவெளிப் பிரிவில் 31,459 வாக்காளர்களும், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவில் 19,337 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியடைந்திருப்பதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன்  தெரிவித்தார்

No comments

Powered by Blogger.