,இரு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 45 பேர் வவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைப்பு
அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 45 பேர் வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இன்று மதியம் கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்றவர்களில் வர முடியாமல் சிக்கியிருந்த 217 பேர் எமிரேட்ஸ் விமான சேவையின் விசேட விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (23) அதிகாலை வந்தடைந்தனர்.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்டவர்களில் இரு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 45 பேர் கொரோனா பரிசோதனைக்காக வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு 03 பேருந்துகளில் இராணுவ பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கவுள்ளதுடன், பீசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-வவுனியா தீபன்-
Post a Comment