14 மாதங்களுக்கு பின்னர் வெளியான குண்டுதாரியின் காட்சிகள்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் குறித்து விசாரணை நடத்தும் குற்ற புலனாய்வுத் துறையின் பிரதம பொலிஸ் பரிசோதகர், வை.அரவிந்த நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார்.
அப்போது அவர், இலங்கையில் பிரசித்திப்பெற்ற மசாலா தூள் விற்பனையாளரான மொஹமட் யூசுப் இப்ராஹிமின் மகன், சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி கொலோசஸ் என்ற நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு வயன் உற்பத்திகளை மீள் ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
முன்பு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சின் கீழ் தொழில்துறை அபிவிருத்தி சபை நிறுவனம் செயற்பட்டடிருந்தமையால் அந்த நிறுவனத்தில் பிரச்சினைகள் எழும் போதேல்லாம் ரிப்கான் பதியுதீன் அதனை தலையிட்டு தீர்த்து வைத்துள்ளதாக சாட்சியாளர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல் சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்சாப் அஹமட்டின் தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலை தாக்குதலுக்கு வழிவகுத்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய சி.சி.டி.வி காட்சிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நேற்று கையளிக்கப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 14 மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஊடகங்களில் வெளிவராத சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் குரல் பதிவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நேற்று கையளிக்கப்பட்டன.
I wonder where Rugby Player Thajudeen???
ReplyDelete