Header Ads



3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா


கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் தப்பவில்லை. அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் திகதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

இந்த பரிசோதனையில், ஷதாப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ரவுப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

மேற்கூறிய மூன்று வீரர்களுக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் சுய தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

No comments

Powered by Blogger.