Header Ads



கொரோனா தொற்றாளர்களை கவனித்தவர்கள் 3 நாட்கள் சொகுசு விடுதியில் தங்கலாம்

கொவிட் 19 தொற்றாளர்களை பராமறிக்க அதிகாலத்தை செலவிட்ட சுகாதார பணியாளர்களை அவர்கள் குடும்பம் சகிதம் இலங்கையில் அதிசொகுசு வாய்ந்த விடுதிகளில் இரண்டு மூன்று நாட்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியால் சுகாதார செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுடன்  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். 

அங்கு உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார். 

இந்த சந்திப்பில் பங்கேற்ற வைத்தியசாலைகளின பணிப்பாளர்கள் உள்ளிட்ட வைத்தியர்கள் கொவிட் 19 தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது நோயாளர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் முகம்கொடுத்த பல்வேறு பிரச்சினைகளை சுகாதார அமைச்சருக்கு தெளிவுப்படுத்தினர். 

இதற்கு பதிலளித்த அமைச்சர், மேற்குறித்த விடயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜிவ முனசிங்கவிற்கு உத்தரவிட்டார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், கொவிட் 19 தொற்றாளர்களுக்கு உரிய உணவு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது பொறுப்பாகும் எனவும் கூறினார். 

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜிவ முனசிங்க, சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

No comments

Powered by Blogger.