Header Ads



புத்தளத்தில் 2 முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பெற வாய்ப்பு - பாயிஸ் தெரிவிப்பு

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டுள்ள நிலையில், 2 முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு உருவாகியிருப்பதாக, தராசு சின்னத்தில் போட்டியிடும் பாயிஸ் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

மிக நீண்ட வருடங்களாக புத்தளம் மாவட்டத்தில் இல்லாமல் இருந்த, முஸ்லிம் பிரதிநிதித்துவம் இம்முறை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உரியமுறையில் மாவட்ட முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டும்.

நாங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளளோம். முஸ்லிம் பகுதிகளில் எங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது. நாங்கள் தனித்துவமாக போட்டியிடுவதை மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றால், ஒரு எம்.பி.யை பெறலாம். 60 ஆயிரம்  வரைக்கும் ஒரு எம்.பி. தான். 

60 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரத்தை தாண்டும் போது இன்னொரு எம்.பி. க்கு வாய்ப்பு உள்ளது.

 எமது தரப்புக்கு கிடைத்தால், ஓரு பிரதிநிதி கிடைப்பது உறுதி. இதையடுத்து மற்றுமொரு பிரதிநிதியும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.

கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளின் உதவியுடன், வேறு பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகினர்.  எனினும் அதற்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, எமது மக்களின் மக்களின் பெறுமதிமிக்க வாக்குகளின் உதவியுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார்.

2 comments:

  1. Mr.பாயிஸ், இப்ப எங்க நிக்கிறயள்? 2 வாய்ப்பூ உள்ளது. ஒண்டு உங்க காதில மற்றது ஹக., காதில சுத்துவதற்கு.

    ReplyDelete
  2. Unity is strength this you can shows to rest of the districts. Wish you all the best to elect for the upcoming election.

    ReplyDelete

Powered by Blogger.