26 வருடங்களாக ஆட்சியைக்கைப்பற்ற முடியாத ரணில், சஜித்தை முடக்க முயற்சி -
(எம்.மனோசித்ரா)
மக்கள் ஆணையைப் பெற்று 26 வருடங்கள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத தலைவர் சஜித் பிரேமாதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை முடக்க முயற்சித்தார். ஆனால் எமக்கு எதிராக எவ்வாறான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றைக் கடந்து பாரிய ஜனநாயக வெற்றியைப் பெற்றுக் கொள்வோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்றி புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. சுமார் 3 தசாப்தங்களாக மக்கள் எதிர்பார்த்த அந்த புதிய தலைமைத்துவத்தை சஜித் பிரேதமாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியாக தற்போது உருவாக்க முடிந்துள்ளது.
இந்நிலையில் 26 வருடங்கள் மக்கள் ஆணையில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத தலைவர் சஜித் பிரேமாதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை முடக்க முயற்சித்தார். வேட்புமனுவில் கையெழுத்திட்ட போது கையெழுத்திட வேண்டாம் புறக்கணிக்கப்படும் என்று கூறினார்கள். எம்முடன் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்தததை அவதானித்த பின்னர் வேட்புமனுக்களை நிராகரிக்னுகுமாறு கோரி நீதிமன்றத்தை நாடினர்.
ஆனால் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டு உரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எம்முடனேயே இருக்கின்றனர். தொழிற்சங்கங்களில் 99 வீதமானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர். மக்களின் ஆதரவற்ற தலைவர் ஜனநாயகத்திற்கு முரணனாக பலாத்காரமாக பிரதேச சபை உறுப்பினர்களை அச்சுறுத்தி கட்சியில் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்.
எவ்வாறான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அவற்றைக் கடந்து சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய ஜனநாயக வெற்றியைப் பெற்றுக் கொள்வோம் என்றார்.
Boolsit politician.muslims vote for ranil last 25 years.he is yahoodi agent.muslim congress also still behind with Ranil dirty politician.75years old .
ReplyDeleteStill doing bad things and big greedy man.may allah guide him