Header Ads



சந்திரனில் இயங்கும் டாய்லெட்டை வடிவமைத்து, தருபவர்களுக்கு 20000 டாலர்கள் வழங்கத் தயார் - நாசா


சந்திரனில் இயங்கும் டாய்லெட்டை வடிவமைத்து தருபவர்களுக்கு 26 லட்ச ரூபாய் சண்மானமாக வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.

விண்வெளி தொடர்பான உண்மைகளை கண்டறியும் நோக்கத்தோடு பல நாடுகளை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற வசதிகளை விண்வெளியில் அமைப்பது மிகவும் கடினமான பணியாகவே இருந்து வருகிறது.

புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களில் உடையுடன் இணைந்தவாறே டைப்பர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிக செலவுகள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி மையமான நாசா வரும் 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், விண்வெளி மற்றும் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சந்திரனின் ஈர்ப்புவிசையில், நுண்ணிய ஈர்ப்பு விசையிலும் இயங்கக்கூடிய கழிவறையை வடிவமைத்து தருபவர்களுக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாய்) பரிசு வழங்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்த சவாலில் உலகில் உள்ள அனைவரும் பங்கேற்கலாம் எனவும், திட்டத்தின் மாதிரி வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குள் எங்களுக்க்கு கிடைக்க வேண்டும் எனவும் நாசா கேட்டுக்கொண்டுள்ளது.

1 comment:

  1. what's wrong with the toilet which they used in 1969

    ReplyDelete

Powered by Blogger.