உயிர்த்த தாக்குதல் தொடர்பில் மேலும் 2 CCTV காட்சிகள் - ஜனாதிபதி ஆணைக்குழு பகிரங்கப்படுத்தியது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை கொழும்பில் உள்ள சங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்த மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தாக்குதல் நடத்த தினத்தன்று அங்கு வந்தமை ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.
தெமட்டகொட மஹாவில பூங்காவில் இரண்டு குண்டு வெடிப்புகளின் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாத சி.சி.ரி.வி காட்சிகளை ஜனாதிபதி ஆணைக்குழு ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியது.
ஆணைக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்ட முதல் சி.சி.ரி.வி காட்சிகளின்படி, கடந்த வருடம் ஏப்ரல் 19 ஆம் திகதி மாலை 6.54 க்கு தெமடகொட மஹாவில பூங்கா 658/90 என்ற இலக்கமுடைய விலாசத்திற்கு கருப்பு நிற கார் வந்தாகவும் பின்னர் அதில் சிலர் ஏறி இரவு 07.03 க்கு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
அவ்வாறு காரில் ஏறி சென்றவர் சங்ரிலா ஹோட்டலில் இரண்டாவது தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட் என விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குண்டுதாரி அதே நாளில் நள்ளிரவு 12.02 அளவில் அவர் தொப்பி அணிந்து வீட்டுக்கு வந்த ஒருவரிடம் இரண்டு பைகளை வழங்கியமை தொடர்பான காணொளியும் ஆணைக்குழுவின் கண்காணிப்புக்கு உள்ளானது.
ஆணைக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்ட இரண்டாவது சி.சி.டி.வி காட்சியில் 20.04.2019 ஆம் திகதி இரவு 10.22 அளவில் பையொன்றை தோளில் சுமந்துக்கொண்டு இப்ராஹிம் அகமட் வீட்டுக்கு வந்ததை காட்டுகிறது.
அப்போது குண்டுதாரியின் சகோதரர் மெஹமட் யூசுப் இஜாஸ் அகமட் தனது சகோதரர் வருவதற்காக வாயில் கதவை திறந்தமை தொடர்பான காட்சிகளும் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.
மேலும் ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலை 1.24 அளவில் தற்கொலை குண்டுதாரிகள் சிவப்பு மேல் சட்டை அணிந்து தொப்பி அணிந்திருப்பதைக் இரண்டாவது சி.சி.டி.வி காட்சி வெளிப்படுத்துகின்றது.
அப்போது மஹாவில பூங்காவில் உள்ள தனது வீட்டில் இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்த இல்ஹாம் அகமட்டின் மனைவியான பாத்திமா ஜெஃப்ரி, தனது கணவர் அங்கிருந்து வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்ததை சி.சி.டி.வி காட்சியில் காண முடிகின்றது.
அதன் பின்னர் பிற்பகல் 2.36 அளவில் முதல் குண்டு வெடித்தாகவும் அதில் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹண பண்டார உள்ளிட்ட மூவர் உயிரிழந்தமை பதிவாகியதாகவும் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
முதல் குண்டு வெடித்து சுமார் 14 நிமிடங்களாகும் போது வீட்டிலிருந்த டிப் சுவிட்சை செயல் இழக்க செய்வதற்காக பொலிஸ் அதிகாரி வீட்டுக்குள் நுழைந்த போது அதாவது மொஹமட் இப்ராகிமுடன் சென்ற போது இரண்டாவது குண்டும் வெடித்தது.
அப்போது நேரம் 02.53 ஆகும்.
இரண்டாவது குண்டு வெடித்த போது மொஹமட் இப்ராகிம் வீட்டிலிருந்து வெளியே வரும் காட்சியும் அதில் பதிவாகியிருந்தது.
இதேவேளை தெமட்டகொட மஹாவில பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு குண்டுகளை வெடிக்கச் செய்த பாத்திமா ஜிப்ரி என்ற பெண்ணின் சகோதரனும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் தனது சாட்சியல் தனது குடும்பம் இலங்கையில் வாழும் ஒரு பாரம்பரிய முஸ்லீம் குடும்பம் என்றும் தனது சகோதரி பாத்திமா ஜெஃப்ரி ஒரு சாதாரண மற்றும் அப்பாவி நபர் என்றும் கூறினார்.
இருப்பினும், அவருக்கு 20 வயதாய் இருக்கும் போது 2012 ஆம் ஆண்டில், மசாலா தூள் விற்பனையாளரான மொஹமட் யூசுப் இப்ராஹிமின் மகன் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட்டை திருமணம் செய்துக் கொண்டதாகவும் அன்றிலிருந்து அவரும் பிரிவினைவாதத்திற்கு துணைப்போகும் நபராக மாறியதாகவும் அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?time_continue=225&v=YVqQwiUyVH4&feature=emb_logo
https://www.youtube.com/watch?time_continue=225&v=YVqQwiUyVH4&feature=emb_logo
Post a Comment