கட்டுநாயக்க விமான நிலையம் - ஆகஸ்ட் 1 திறக்கப்படுகிறது
கொரோனா பேரிடர் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
விமான நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் புதிய செயற்திட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை அவ்விடத்திலே கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பரிசோதனை அறிக்கை வரும்வரை, அவர்களை விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களில் தங்கவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment