Header Ads



ரணிலுக்கு பின் நானே UNP யின் தலைவன், கட்சி விலகி புதிய கட்சி உருவாக்கியவர்கள் அங்கேயே இருக்கவேண்டும்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு தான் தயார் என்று அக்கட்சியின் உப - தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து விலகிச் சென்று புதிய கட்சியை உருவாக்கியவர்கள் அங்கேயே இருக்கவேண்டும் என்றும் அவ்வாறானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் எவ்விதமான உரிமையை கொண்டாடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

வெயிலில் அலைந்து திரிபவர்கள் சோர்வடையும் போது, இளைப்பாறி செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றும் அம்பலமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றச்சாட்டப்பட்டுள்ள கட்சி, பௌத்தத்துக்கு எதிரானவர்கள், சிறிகொத்தாவுக்கு கல்லெறிந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

7 comments:

  1. அப்ப unp காணாமல் போய் விடும் என்று சொல்லுறீங்க...

    ReplyDelete
  2. Finally black sheep found

    ReplyDelete
  3. கடந்த அரசாங்கத்தையே சீரழித்த மத்தியவங்கி திருடன். இவன் இருக்கவேண்டிய இடம் சிறைச்சாலை

    ReplyDelete
  4. மத்திய வங்கியைக் கொள்ளையடிப்பதில் முன்நின்று உழைத்து கோடான கோடி பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்த பயங்கரக் கொள்ளைக்காரனைக் கட்சியின் தலைவனாக மாற்றினால் அந்தக் கட்சி நிலைத்து நிற்க நிச்சியம் இந்த நாட்டு மக்கள் எந்த ஒத்துழைப்பையும் வழங்க மாட்டார்கள்.

    ReplyDelete
  5. BETTER GOOD LEADER.JAYAWEWA.
    YOUR THE NEXT LOOSER AFTER RANIL

    ReplyDelete
  6. His target is UNP funds. It shouldn't be allowed. Must fight back. They're our contribution s.

    ReplyDelete
  7. பயணிகள் இல்லாத பஸ்ஸ யார் ஓட்டுனாத்தான் என்ன?

    ReplyDelete

Powered by Blogger.