கட்டுப்பாடு தளர்வால் அமெரிக்காவில், வேகமாக பரவிவரும் கொரோனா
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல மாகாணங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 இலட்சத்தை தாண்டியுள்ளது.
2.58 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும், 12.37 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலக பாதிப்பு மற்றும் உயிரிழப்பில், மூன்றில் ஒரு பங்கு, அமெரிக்காவில் பதிவாகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இதனால், பல மாகாணங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் நிச்சயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Post a Comment