மோதரயில் நேற்று வபாத்தான பெண்ணின், குடும்பத்தில் எவருக்கும் தொற்று இல்லை - சுகாதார அமைச்சு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த 52 வயதுடைய பாத்திமா றினோஸா நேற்று உயிரிழந்தார். இது இலங்கையின் கொரோனா தக்கத்திற்குள்ளாகி இறந்தவர்களில் 9வது உயிரிழப்பாகும்.
இவ்வாறு நேற்று உயிரிழந்த முஸ்லிம் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் தொற்று இல்லை என இன்று நடைபெற்ற பி.சி.ஆர். பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எனினும், அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த குறித்த பெண்ணுக்குக் கொரோனா சமூகத் தொற்று வழியாகப் பரவியிருக்கலாம் எனப் பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப் பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என விசாரணை நடைபெறும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இப் பெண்ணின் உடல் நேற்றையதினம் எரியூட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவர் தங்கியிருந்த மோதரைப் பகுதீ கிருமி நாசினி தெளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
புரியாத புதிர்
ReplyDeleteஅல்லாஹ்வின் சாபம் நிச்சயம் இவர்களுக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ்வின் உதவி முஸ்லிம்களுக்கு மிக மிக அவசியம்
ReplyDeleteஇந்தப் பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருந்திருக்காது, வலுக்கட்டாயமாக கொரோனா அப்பாவிப் பெண்ணுக்கு திணிக்கப்பட்டடாகத் தெரிகிறது.
ReplyDeleteThere is no proof that lady was positive by corona virus, thats'why other people also not effected and no positive ...
ReplyDelete