நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 29 பேர் குறித்த விபரம் - 7 வயது குழந்தையும் அடக்கம்
கொரோனா தொற்றாளர்களாக நேற்று (06) இனங்காணப்பட்ட 29 பேரில் 24 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவரென, அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நால்வரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்களென தெரிவிக்கப்படுகிறது. குறித்த நான்கு பேரில் 07 வயது குழந்தையும் அடங்குவதாக, விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment