Header Ads



வைரசின் பிடியில் தவிக்கும் அமெரிக்கா - செப்டம்பர் 11 சம்பவத்தைவிட மோசமானது என்கிறார் டிரம்ப்

கொரோனா வைரஸ் நெருக்கடி பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரசின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நாடு பிற நாடுகளை விட அதிக பாதிப்பை தினமும் சந்தித்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலி 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

அங்கு ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் திறந்து விடுகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நெருக்கடி பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் நடந்த பியர்ல் ஹார்பர் தாக்குதல் அல்லது இரட்டை கோபுரம் தாக்குதல் (செப்டம்பர் 11-ம் தேதி) சம்பவத்தை விட மிக மோசமானது கொரோனா வைரஸ் நெருக்கடி என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஒவ்வொரு நாளும் யாரையாவது குற்றம் சாட்டிக் கொண்டு பொதுமக்களுக்கு பயத்தை உண்டுபண்ணி அதற்கு எந்த விதமான பதில் நடவடிக்ைககளையும் அறிவிக்காது அதையும் இதையும் உளறிக் கொண்டு காலம் கடத்துவதற்கா அமெரிக்க மக்கள் இந்த பாவிக்கு வாக்களித்தார்கள் எனக் கேட்கத் தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. No use of blaming him... rather the people who cast their vote to make him as their leader, should at least feel sham and regret for their decision.

    ReplyDelete

Powered by Blogger.