ஒருமுறை குணமடைந்தால் மீண்டும் கொரோனா தொற்றாது என்பதற்கு ஆதாரம் இல்லை: எச்சரிக்கும் WHO
சில நாடுகள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்கள் அல்லது சான்றிதழ்களை வழங்குகின்றன.
அதாவது அவர்கள் பாதுகாப்பானவர்கள், அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றாது, அவர்கள் பணிக்குத் திரும்பலாம் என்பதைக் காட்ட இதை செய்கின்றன அந்த நாடுகள்.
சிலி நாடு கடந்த வாரம் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு ஆரோக்கிய பாஸ்போர்ட்களை வழங்க இருப்பதாக தெரிவித்தது.
அவர்கள் உடலில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டறிந்ததும் அவர்கள் வேலைக்குத் திரும்பலாம்.
ஆனால், ஒருமுறை கொரோனாவிலிருந்து குணமடைந்து தங்கள் உடலில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் இருப்பவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றாது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்கள் அல்லது அபாயமற்றவர்கள் என சான்றிதழ்களை வழங்குவது கொரோனா பரவும் அபாயத்தை அதிகரிக்கத்தான் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்து தங்கள் உடலில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் இருப்பவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றாது என்பதற்கு தற்போதைக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ள உலக சுகாதார மையம், அதை நம்பி நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்கள் அல்லது அபாயமற்றவர்கள் என சான்றிதழ்களை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
Post a Comment