Header Ads



UNP ஆட்சியில் கொரோனா வந்திருந்தால் இலங்கை, இத்தாலியாக மாறியிருக்கும்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கூறுவதை ஏற்றுக்கொள்ள நாட்டு மக்கள் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரில் இன்று -30- ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மங்கள சமரவீர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மக்கள் விடுதலை முன்னணியையும் பிளவுப்படுத்தினார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தி விட்டு, நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரச பணத்தை பயன்படுத்த எவ்வித அதிகாரமும் இல்லை மங்கள கூறுகிறார்.

கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் இந்த கொரோனா வைரஸ் நாட்டில் பரவி இருந்தால், எமது நாட்டில் மக்கள், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளை போல் மரணித்து விழும் நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் சீ.பி. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Does this mean... Ther presently America and Italy has goverments similar to what UNP was in Srilanka ?

    ReplyDelete

Powered by Blogger.