முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பு பற்றி, வழக்கு தொடுக்கப்படும் - எரிப்பதா? புதைப்பதா? என தீர்மானிக்க GMOA க்கு அதிகாரம் இல்லை
கொராேனா தொற்றினால் மரணிப்பவர்களை எரிப்பதா ? புதைப்பதா ? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு இல்லை. அதனை விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்கின்ற பிரிவினரே தீர்மானிக்கவேண்டும். அத்துடன் கொராேனாவை பயன்டுத்திக்கொண்டு அரசாங்கம் எப்படியாவது தேர்தலை நடத்துவதற்கே முயற்சிக்கின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அரசாங்கத்துக்கு தேவையான முறையிலே தீர்மானங்களை எடுத்துவருகின்றது. குறிப்பாக கொராேனா வைரஸ் தாக்கத்தில் மரணிப்பவர்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது தொடர்பாக வைத்தியர்களின் ஆலாேசனையின் பிரகாரமே மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
மரணித்த ஒருவரின் மரணம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் குறித்த உடலை பகுப்பாய்வு செய்யவேண்டும் என தெரிவிக்கும் விடயத்தை மாத்திரமே வைத்தியர்களால் தெரிவிக்க முடியும். வேறு எந்த கட்டளையும் பிறப்பிக்க முடியாது.
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை எரிப்பதா? புதைப்பதா? என்ற தீர்மானத்தை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்தே அதுதொடர்பாக தீர்மானிக்கவேண்டும். அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்துக்கு தேவையான முறையில் செயற்பட்டு வருகின்றது.
அதனால் எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் தொடர்பாக என்றாவது ஒருநாள் வழக்கு தொடுக்கப்படும். அப்போது இந்த வைத்தியர்களை பாதுகாக்க இந்த அரசாங்கமோ வைத்திய அதிகாரிகள் சங்கமோ முன்வராது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். முஸ்லிம்களை புண்படுத்துவதன் மூலம் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
இதேவேளை கொராேனா வைரஸை பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் எப்படியாவது தேர்தலை நடத்தி முடிக்க முயற்சிக்கின்றது. அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் செய்யவில்லை. அதனால் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்திருந்த நிலையிலே கொராேனா வைரஸ் பாதிப்பு நாட்டுக்கு ஏற்பட்டது. தற்போது கொராேனாவை காரணம் காட்டி தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்ள திட்டுமிட்டு வருகின்றது.
ஆனால் கொராேனா தாக்கம் நாட்டில் இன்னும் குறைவடையவில்லை. அதன் அபாயம் இன்னும் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துவருகின்றனர். நாட்டின் சில பிரதேசங்கள் இன்னும் முடக்கப்பட்டிருக்கின்றன. முடக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களை விடுவிக்க இன்னும் 3 வாரங்கள் வரை செல்லும். அவ்வாறான நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும்.
இருந்தபோதும் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கே இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கின்றார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கும் அதிகாரம் தெரியாமலே இவர்கள் கதைக்கின்றனர். தேர்தலை எப்போது நடத்துவதென்ற தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்கவேண்டும். அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசாங்கத்துக்கு முடியுமானால் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கவேண்டும் என்றார்.
GMOA முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எவ்விதமான சிபார்சுகளையும் செய்யவில்லை.
ReplyDeleteமாறாக அவர்கள் DGHS கு எழுதியது WHO இன் சிபார்சான அடக்கம்
செய்வதற்குரிய உரிமையும் உண்டு என்பதை மற்ற நாடுகள் போல் இடமளிக்க வேண்டும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை ஆராய்ந்து விரைவில் முடிவெடுக்க கோரியும்தான்.
JMO அதாவது சட்ட வைத்திய அதிகாரி ஒருவரும் இந்த நோயின் பரவும் தன்மையை ஆழமாக அறியாத சில மருத்துவர்களும்தான் இதில் முக்கியமாக முடிவு எடுக்க DGHS ஐ அறிவுறுத்தியவர்கள்
GMOA never said only to cremation.
ReplyDelete