கல்முனை எக்டோவில் (ECDO) பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தி
கல்முனை எக்டோவில் (ECDO) இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் உயர்தரத்திற்கு தெரிவு - ஒரு மாணவி 9A பெற்று சாதனை
எக்டொ என்று அழைக்கப்படும் கல்முனை கல்வி கலாச்சார மேம்பாட்டு தாபனத்தின் கீழ் இயங்கிவரும் அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியானது கடந்த ஒரு தசாப்த காலமாக வசதி குறைந்த மாணவர்களுக்கென முற்றிலும் இலவசமாக மேலதிக வகுப்புகளை நடாத்தி வருகின்றது.
இக்கல்லூரியில் கல்வி பயின்று கடந்த வருடம் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதிய தாஹிர் பாத்திமா தஹ்ஸின் என்னும் மாணவி 9A சித்திகளை பெற்று கல்லூரிக்கும் எம் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும், இக்கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவர்கள் 8A, 7A, 6A சித்திகள் உள்ளிட்ட சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தரம் கற்கும் தகுதியை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டு தாபனமானது கடந்த 20 வருடங்களாக கல்முனை பிராந்தியத்தில் இலவச கல்வி, நூலக செயற்பாடு மற்றும் சமூக சேவை பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. இத்தாபனத்தின் பிரதான கல்வி சேவையாக இப்பிராந்திய மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கற்பதற்கு ஏதுவாக தனது நிரந்தர கட்டிடத்தொகுதியில் வாசிகசாலை அமைத்து அதில் சுமார் 1900 அங்கத்தவர்கள் அடங்கலாக 10000 க்கும் மேற்பட்ட நூல்களை தன்னகத்தை வைத்து கல்வி சேவை வழங்கி வருகின்றது.
அத்தோடு இணைந்ததாக இக்கட்டிடத் தொகுதியின் முதலாம் தளத்தில் வசதி குறைந்த தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவ மற்றும் மாணவிகளுக்கு முற்றிலும் இலவச மேலதிக கல்வியினை வழங்கி வருகின்றது. மேலும், இக்கல்லூரிக்கான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அக்கட்டிடத்தொகுதியின் இரண்டாம் தளத்தையும் நிர்மாணித்து அதிலும் இலவசமாக மேலதிக கல்வி சேவையினை வழங்கும் நோக்கில் கட்டிடத்தின் மேற்தளத்தை நிர்மாணிக்க தேவையான நிதியை சேகரிக்கும் முயற்சியில் இத்தாபனத்தின் நிருவாகிகள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பெறுபேற்றுக்காய் சிறம்பட சேவையாற்றிய இக்கல்லூரியின் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் இத்தாபனத்தின் நிருவாகிகள் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
Post a Comment