ஊரடங்கு தளர்ந்தாலும், ஊரடங்கு போன்றே மக்கள் செயற்பட வேண்டும் - Dr சுகுணன்
நாளைய தினம் (20) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
ஆயினும் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதிலும், மக்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போன்றே நடந்து கொள்ள வேண்டும் என, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு சமூக இடைவெளிகளைப் பேணுவதன் மூலமே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தொடர்ந்தும் பாதுகாப்புப் பெறலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இல்லாதொழிக்கும் வரை அல்லது அரசாங்கமும் சுகாதாரத்துறையினரும் இவ்விடயத்தை உறுதிப்படுத்தும் வரை இதனை பேணுவது உகந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
பாறுக் ஷிஹான்
Post a Comment