Header Ads



செப்டம்பர் வரை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடல் - வங்காளதேசம் அதிரடி

கொரோனா காரணமாக வங்காளதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் செபடம்பர் மாதம் வரை மூட அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

வங்காளதேசத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 5 ஆயிரத்து 913 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் சில விதிவிலக்குகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா முக்கிய அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையின் போது கொரோனாவின் தாக்கம் காரணமாக செப்டம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, வங்காளதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் செப்டம்பர் மாதம் வரை மூடுவதாக பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்தார்.  

மாணவர்கள் உள்பட அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஹசீனா தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்நாட்டில் உள்ள பல்வேறு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.