லொக் டவுன் - அனைவரினது தேவைகளையும் நிறைவேற்றுபவன் அல்லாஹ் ஒருவனே...
தனிமைப்படுத்தப்படடு, முடக்கப்பட்ட புத்தளம்ஸாலிஹீன் பள்ளி ஒழுங்கையில் வசிக்கும், ஒரு சகோதரியின் உள்ளத்தில் உதித்தவை
அனைவரினது தேவைகளையும் நிறைவேற்றுபவன் அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனே!
கள்ளுக்குளிருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் மகத்துவமிக்க அல்லாஹ்வே!
இந்த முடக்கப்படட் பகுதியின் தேவைகளை கையில் பணமிருந்தாலும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் என்னைப் போன்ற ஆண் துணையற்ற எத்தனையோ சகோதரிகள் உள்ளனர்.
மீன் வியாபாரி, மரக்கறி வியாபாரி என எவருமே உள் நுழைய முடியாத நிலை. ஆவைகளை வாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பவர்களின் நிலையையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! எதிர் பார்க்காமல் தேவைகளை நிறைவேற்றுபவனும் அவனே!
சில சமயங்களில்வாசற்கதவு தட்டும்சத்தம் கேட்டு போய் பார்த்தால், உலர் உணவு பொதியுடன் ஒரு நலன் விரும்பி நிற்பார். இப்படித்தான்சிலநாட்களுக்குமுன், என்வீடடு;க் கதவு தட்டும் சத்தம் கேடடு; போய் பார்த்த போது, எனக்கு நன்றாக பரீட்சயமான (எல்ப் ஓட்டும்) ஒரு சாரதி நின்றிருந்தார். சுமார் 4000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதியை தந்தார். நான் யார் தம்பி இதனை தந்தது எனக் கேட்டேன.;
அதற்கவர் 'யாரும் இல்ல ராத்தா, நானும் 4,5 கூட்டாளிகளும் சேர்ந்து எங்களால் முடிந்ததை கொடுத்தோம். அதில் உங்களுக்கும் ஒரு பார்சல்' எனக் கூறினார்.
அதன் பின், இன்னும் சில நாட்களுக்குப் பிறகு வேறு சிலரால் கோழி இறைச்சி வழங்கப்பட்டது. இன்னொரு நாள், கொட்டும் மழையையும,; மின்சார துண்டிப்பையும் பொருட்படுத்தாது ஒரு இளைஞர் கூட்டம் இரவுச் சாப்பாட்டிற்காக பாணும், இறைச்சி கறியும் பகிர்ந்தளித்துச் சென்றனர். சுப்ஹானல்லாஹ்!
போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, போட்டோ இல்லை. அல்லாஹ்வின் அருளை மட்டும் எதிர்பார்த்துச் செய்யும் இப்படியான தர்மங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
இப்படிப்படட் நல்ல உள்ளம் கொண்டவர்களின் வாழ்வை நீளமாக்கி, ஆரோக்கியத்தையும் அளித்து, அவர்களின் பொருளாதாரத்திலும் பரக்கத் செய்ய வேண்டுமென அந்த அளவற்ற அன்பாளனை மனமுறுகி
வேண்டுகிறேன்.
masha allah..........
ReplyDeleteஅல்லாஹ் கரீம்
ReplyDelete