Header Ads



பேஸ்புக்கில் இப்படியும் செய்கிறார்கள்

இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர், உறவினர் போன்றவர்களின் பேஸ்புக் கணக்கிலிருந்து வரும் குறுந்தகவல் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

ஏதாவது ஒரு இணையத்தளத்தின் முகவரி ஒன்று நண்பரின் பேஸ்புக் கணக்கில் அனுப்படுகின்றது. அதனை அழுத்துமாறு (Click) கூறப்படுகின்றது.

நண்பரிடம் இருந்து வருகின்றது என்று நினைத்து அதனை அழுத்தினால் பயனாளரின் பேஸ்புக் கணக்கு ஹெக்கர்களின் கைகளுக்கு சென்று விடுவதாக கூறப்படுகின்றது

அதன் பின்னர் பயனாளரின் பேஸ்புக் கணக்கிற்கு செல்லும் ஹெக்கர்கள் அதில் இருந்து நண்பர்களுக்கு அதே போன்ற இணைய முகவரி ஒன்று அனுப்பப்பட்டு தகவல்கள் திருடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கையில் பெருமளவு இலங்கை பயனாளர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.