Header Ads



இலங்கையில் கொரோனா - பேராசிரியர் நிலிக்கா மலவிகே கூறியுள்ள முக்கிய விடயம்


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட்-19 A வகையான வைரேஸ் தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினால் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு டெங்கு ஆய்வு நிலையத்தின் இயக்குனர் பேராசிரியர் நிலிக்கா மலவிகே தலைமை தாங்கியுள்ளார்.

கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸை விஞ்ஞான பெயரில் சாஸ் கொவிட் என்றே அழைக்கப்படுகின்றது.

A, B மற்றும் C ஆகிய மூன்று அடிப்படை வகைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட சீனாவின் வுஹான் மாநிலத்தில் கொவிட் 19 B வகையே பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பிய எல்லையில் அதிகமாக பரவும் கொரோனா C வகையை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தற்போது பரவும் கொரோனா A வகையை சேர்ந்ததென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த A வகை கொரோனா அதிகமாக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைரஸின் ஒவ்வொரு பிரிவினாலும் ஏற்படும் சிக்கல்கள் வேறுபட்டவை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சில நாடுகளில் கோவிட் -19 இறப்பு விகிதம் பாரிய அதிகரிப்பிற்கு இந்த மாற்றங்கள் காரணமாகும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய வைரஸ் தொற்றுக்கு மற்றொரு நாட்டில் காணப்படும் தடுப்பூசி இன்னும் ஒரு நாட்டிற்கு பொருத்தமானதா என்பதைப் புரிந்து கொள்ள, அந்த நாட்டில் பரவும் வைரஸ்களின் வகைகளை முதலில் அடையாளம் காண வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.