கடைசி கலீஃபா ஸுல்தான் அப்துல் ஹமீது, அவர்களின் இறுதி இரவு...
சரியாக 111 வருடங்களுக்கு முன்பு, #1909ம்_ஆண்டு_ஏப்ரல்_26 திங்கள் இரவு…
நடுநிசியில் நடுங்கும் குளிரில் இஸ்தான்புல் நகரமே உறங்கிக்கொண்டிருந்த வேளையில், உதுமானிய கிலாஃபத்தின் பழைய அரண்மனையில் ஓர் அறையில் ஒரு விளக்கு மட்டும் மங்கலாக எரிந்துகொண்டிருந்தது.
‘ஸ்டார் பேலஸ்’ என்ற அந்த நட்சத்திர அரண்மனையின் அந்த அறையில் 66 வயதுடைய அந்த முதியவர் தன் கடைசி டைரிக் குறிப்பை எழுதிக்கொண்டிருந்தார்.
“இஸ்லாமிய கலீஃபாவான அப்துல் ஹமீதாகிய நான் (உதுமானியப் பேரரசின்) இந்த வீழ்ச்சிக்கு யாரையும் குற்றம் சுமத்தவில்லை. ஆனால் பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்த், இன்னும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நமது புனித உதுமானிய மண்ணைக் கூறு போடுவதிலும் பிளவுபடுத்துவதிலும் பெரும் பயன்களைப் பெற்றிருக்கின்றனர். இதுதான் இந்த அரண்மனையில் எனது இறுதி இரவாக இருக்கலாம். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இயற்கை தன் அறிகுறிகளைக் காட்டிவிட்டது. நாளை நான் பதவி இறக்கப்பட்டால் அல்லாஹ்விடமே என்னை ஒப்படைக்கிறேன். – (ஒப்பம்) இஸ்லாமிய கலீஃபா ஸுல்தான் அப்துல் ஹமீது.”
அந்த இரவு மற்ற இரவுகளை விட வித்தியாசமாக இருந்தது. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை அது வெளிக்காட்டுவது போலிருந்தது.
மறுநாள் #1909ம்_ஆண்டு_ஏப்ரல்_27, செவ்வாய் காலை 7 மணிக்கு பெரும்பாலான பாராளுமன்ற, செனட் உறுப்பினர்கள் ஆலோசனை மண்பத்தில் குழுமியிருந்தனர். அவர்களிடம் சுயநலமும் வஞ்சகமுமே விஞ்சியிருந்தன. ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்களைப் பதவியிலிருந்து இறக்கியே தீர்வது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
ஓட்டெடுப்பு நடந்தது. பெரும்பான்மை ஓட்டுகளின் படி ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் கலீஃபா பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.
முற்பகல் 10.50 மணியளவில் ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்களின் இளைய சகோதரர் முஹம்மத் ரிஷாத் எஃபென்டி என்பவரைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய கலீஃபாவாகத் தேர்ந்தெடுத்தனர். மாலை 4 மணிக்கு கலீஃபாவாகவும் உதுமானியப் பேரரசின் ஸுல்தானாகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.
முறையான கடைசி கலீஃபாவான ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்களும் அவரின் குடும்பத்தார் 38 உறுப்பினர்களும் கிரேக்க நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
மறுநாள் #1909_ஏப்ரல்_28 புதன் அன்று அதிகாலை 3 மணியளவில் ஸுல்தானும், அவரின் குடும்பத்தாரும் இஸ்தான்புல் நகரிலிருந்து ஒரு ரயிலில் தெஸ்ஸலோனிகி என்ற கிரேக்க நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
எதிர்பார்த்தபடி, ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்களிடமிருந்து கலீஃபா பதவி பறிக்கப்பட்ட பிறகு உதுமானியப் பேரரசில் பெரும் பிளவுகளும், குழப்பங்களும் உட்சண்டைகளும் நிகழ்ந்தன. முதலாம் பால்கன் யுத்தமும், இரண்டாம் பால்கன் யுத்தமும் நடந்தன. முதல் உலகப் போர் நடந்தது. அனைத்துப் போர்களிலும் உதுமானியப் பேரரசு தோல்விக்கு மேல் தோல்விகளைத் தழுவியது.
இறுதியில் #1922ம்_ஆண்டு உதுமானியப் பேரரசு போதிய பலமிழந்து கலைக்கப்பட்டது. #1924ம்_ஆண்டு_மார்ச்_3 அன்று அதிகாரப்பூர்வமாக இஸ்லாமிய கிலாஃபா வீழ்த்தப்பட்டது.
ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்களின் பதவி பறிக்கப்பட்டதோடு, உலகளாவிய இஸ்லாமியத் தலைமை முடிவுக்கு வந்தது.
This is what Islam teaches us that, for minor worldly mistakes .. do not try to protest against your muslim ruler..
ReplyDeleteBut today there are many so called jamaaths keep igniting and promoting people to protest their muslim leaders for worldly mostakes.
ISLAM tells that you can only go against them (ruler) if they openly deny tawheed and force you to do so.....
Hope these so called islamic jamaaths will not do such mistake any more....
ஆத்மீக பேரரசு அந்த ஆண்டு ஆரம்பமானது.இப்போது 200க்கும் மேட்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன ஏற்றுக்கொள்ள கஸ்டமாகஇருக்குமே
ReplyDeleteInnalillah
ReplyDeleteEllam OK..but Only 4-Khalifas in Islam... this is what we know..
ReplyDeleteIs there more..? Anyone can explain? (May be I am wrong...)
hey faji...before comment him, just study the islam....Is there any khalifath more than 4 in islam? (Abubaker, Omar, Uthmman, and Ali)
ReplyDeleteDont drive the people with wrong sultans or khalifaths...u see now ISIS also came with khaleefath...then is that correct?
U see for the real islamic khalifa...why this man used palace...?... its just governments or kings like Guls states... Dont call khalifath..
Khalifath ended with 4- real khaleefaas...
nazeer
ReplyDeleteUmar ibnu abdul asees (rah) பற்றிய உமது அபிப்பிராயம் என்ன? ARS உண்மையில் முஸ்லிமா அல்லது முஸ்லிம் இல்லையா என்பது எனக்கு தெரியாது. தெரிந்தால் அதற்கேற்றவாறு பதில் சொல்லலாம் என்று நினைத்தேன். முஸ்லிம் என்றால் பதில் சொல்லத்தேவை இல்லை.