முதன்முதலாக கொரோனாவை கண்டுபிடித்த, சீன பெண் மருத்துவர் மாயம்
சீனாவில் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்த மருத்துவர் ஏய் பென் திடீரென மாயமாகி நிலையில், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியாத நிலையில் இருக்கின்றது.
சீனாவில் தான் கொரோனா பரவியது என கூறப்படுவது தற்போது முழு அளவில் நிரூபணமாகி இருக்கிறது.
சீனாவின் வூஹான் மருத்துவமனையில் ஒரு நோயாளி இருமல் காய்ச்சலுடன் டிசம்பர் மாதம் 30ம் திகதி வந்துள்ளவரை, மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவர் ஏய் பென், ரத்த பரிசோதனை முடிவினை அவதானித்துள்ளார்.
முதலில் சார்ஸ், புளூ காய்ச்சல் என சந்தேகிக்கத்த மருத்துவர், தனது மருத்துவ குழுவினருக்கு இந்த ரத்த பரிசோதனையை அனுப்பியுள்ளார்.
அவர்கள் இது ஒரு புதிய வைரஸ் மேல் தரப்பின் உத்தரவு இல்லாமல் இதனை வெளியே கூற முடியாது என்று கூறியுள்ளனர். ஆனால் இதனை ஏய்பென் வெளியே தெரிவிக்க விரும்பியதையடுத்து, மருத்துவ ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியினர் குறித்த மருத்துவரை அழைத்து எச்சரித்துள்ளது.
வதந்திகளைப் பரப்புதல் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவித்தல் குற்றம் செய்ததாக அவர் கண்டிக்கப்பட்டு, இது தொடர்பான செய்திகளையோ அல்லது படங்களையோ அனுப்ப தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, நான் தான் இந்த புதிய வைரஸை கண்டுபிடித்தேன். தொடர்ந்து வூஹான் மருத்துவமனைக்கு வந்த பலருக்கும் இது போன்ற தொற்று இருந்தது. ஒரு நோயாளி பாதிக்கப்பட்டபோது தொடர்பான விழிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போது உலகம் முழுவதும் நடக்கும் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மருத்துவர் ஏய் பென் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவரை சீன அரசு தனிச்சிறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றது.
Post a Comment