பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை, அமைக்க எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை
முப்படை அங்கத்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உள்வாங்குவதற்காக பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக அமைப்பதற்காக எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முப்படை அங்கத்தவர்களுக்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு அரசாங்க பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சிலர் மேற்கொள்ளும் கூற்றை நிராகரித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன இது தொடர்பாக தெரிவிக்கையில் இராணுவ அங்கத்தவர்களின் தனிமைப்படுத்தலுக்காக பயன்படுத்தவில்லை. இருப்பினும் மேலதிக முகாமாக பாடசாலை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
Post a Comment