விமல் வீரவன்ச மூடிக்கொண்டு, இருக்க வேண்டும் - மனோ
- Mano Ganesan -
கொரோனாவுக்கு அப்பால், சிறுநீரக, நீரழிவு, இருதய, புற்றுநோய் வியாதிகளை எதிர்கொண்டுள்ள நோயாளர்கள், மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக இப்போதே தவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
“மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கையிருப்பில் முக்கியமான மருந்துகள் இல்லை” என்ற இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள அவசர (SOS) மருந்து பட்டியல் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசாங்கம், இந்தியாவிலேயே மருந்து தேவைப்படும் இன்றைய சூழலிலும்கூட, மருந்துவகை மூலப்பொருட்கள் சீனாவிலிருந்துதான் வரவேண்டும் என்ற நிலைமையிலும் கூட, நாம் கேட்ட மருந்துகளை “அரசாங்கம்-அரசாங்கம் (G2G) பரிவர்த்தனை” என்ற அடிப்படையில் (அதாவது தனியார் இல்லை!) வழங்க முடிவு செய்துள்ளமையை அறிந்து நாம் இந்திய அரசுக்கு இலங்கையின் துன்பப்படும் அனைத்து மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
அதேவேளை எப்போதும், எதற்கும், “இந்திய எதிர்ப்பு கோஷம்” எழுப்பும் விமல் வீரவன்ச உள்ளிட்ட நபர்களை, தயவு செய்து மூடிக்கொண்டு இருக்கும்படியும் அறிவுறுத்துகிறோம்.
Post a Comment