ஹஐ லவ் யூ - நான் கேட்ட சிறந்த வாழ்க்கையை கொடுத்ததற்காக...' கொரோனா பாதித்தவரின் கடைசி நிமிடங்கள்
`ஐ லவ் யூ… நான் கேட்ட சிறந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்ததற்காக...’ மரணப்படுக்கையில் தன் மனைவிக்கு கணவன் உதிர்த்த கடைசி வார்த்தைகள். மனைவி, 2 குழந்தைகள் என ஜொனாதனுக்கு அழகிய குடும்பம். கேட்டி கொயல்ஹோ-வுக்கு கணவனாக இருப்பதில் நான் பெருமைகொள்கிறேன். அமெரிக்காவைத் தாக்கிய கொரோனா வைரஸ், இந்த அழகிய குடும்பத்தை விட்டுவைக்கவில்லை.
கொரோனா தாக்கம் காரணமாக ஜொனாதன் டான்பரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு குழந்தைகளுடன் கணவனின் வருகைக்காகக் காத்திருந்தார் கேட்டி. மருத்துவமனையிலிருந்து வந்த தகவல், கேட்டியின் செவிகளில் இடியாய் இறங்கியது.
மரணம், இந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியை பறித்துச் சென்றுவிட்டது. மருத்துவமனையில் இருந்த கணவனின் பொருள்களை வாங்கிவருவதற்காக கேட்டி சென்றார். மரணப்படுக்கையிலும் தன் மனைவிக்காக சில வார்த்தைகளை ஆடியோவாகப் பதிவுசெய்துள்ளார் ஜொனாதன். 32 வயதான ஜொனாதன், மார்ச் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 22-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். 20 நாள்களுக்கு மேலாக தன்னுடைய வாழ்க்கையை வென்டிலேட்டரில் கழித்துள்ளார்.
ஜொனாதன், மனைவிக்காக உதிர்த்த கடைசி வார்த்தைகள்...``நான் உன்னை மனதார நேசிக்கிறேன். நான் கேட்ட சிறந்த வாழ்க்கையை எனக்காக நீ வழங்கினாய். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உனக்கு கணவனாகவும் பிராட்டின் மற்றும் பென்னியின் தந்தையாக இருப்பதில் எனக்கு பெருமை. கேட், நான் சந்தித்த மிகவும் அழகான அன்பான பெண். நீ உண்மையிலே அற்புதமானவள். நீ குழந்தைகளுக்கு சிறந்த தாயாக இருக்கிறாய்’’ என மனைவி குறித்த பசுமையான நினைவுகள் பதிவு செய்துள்ளார்.
``பிராடின், உனக்கு தந்தையாக இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீ அவ்வளவு அற்புதமான விஷயங்களைச் செய்து வருகிறாய். பென்னி, அவள் ஓர் இளவரசி. கேட் உன்னையும் குழந்தைகளையும் விரும்பும் ஒரு நபரை சந்தித்தால். நீ பின்வாங்க வேண்டாம். உங்களுக்காக நான் அதையும் விரும்புகிறேன் என நினைவில் வைத்துக்கொள். எதுவாக இருந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்” என அவர் பேசியது அனைவரையும் கண் கலங்கச்செய்துள்ளது.
கேட்டி பேசும்போது, ``நான் ஐசியூ-வில் உட்கார்ந்து அழுதேன். நாங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்று கூறினேன். அப்போதுதான் அவருடைய போனை என்னிடம் கொடுத்தார்கள். அதை ஆன் செய்து பார்த்தபோது சில குறிப்புகள் இருந்தன. ஒரு மாதத்துக்கு மேல் அவர் இந்த நோயுடன் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு என் மீதும் குழந்தைகள் மீதும் கவனம் இருந்துள்ளது” என்று கண்ணீர் வடிக்கிறார்.
Post a Comment