போதைப்பொருள் குற்றச்சாட்டில், கைதானவருக்கு கொரோனா அறிகுறிகள்
(எம்.எப்.எம்.பஸீர்)
ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பன்னலை பொலிஸார் கைது செய்த சந்தேக நபர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதன் விளைவாக, அவர் குருணாகல் போதன அவைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்ட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நேற்று முன்தினம் குளியாப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.
அவ்வாறு அவர் ஆஜர் செய்யப்படும் போது அதிக காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்றின் அறிகுறிகளுடன் இருந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக நீதிவான், பொது சுகாதார பரிசோதகர்களையும் சுகாதார அதிகாரிகளையும் நீதிமன்றுக்கு அழைத்து சந்தேக நபரை குருணாகல் போதன அவைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடம் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையில் இத்தாயில் இருந்து வந்தோருடன் விருந்துபசார களியாட்டம் ஒன்றில் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment