முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புவதாக பொய் சொல்லி, புலனாய்வாளராக நடித்தவன் அடையாளம் காணப்பட்டான்
“புலனாய்வுப் பிரிவின் தகவல்” என போலியான குரல் பதிவொன்றினை சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
முஸ்லிம்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்புவதாக தமது பிரதான உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக குறிப்பிட்டு ஒலி நாடா ஒன்றினை வெளியிட்டு, தான் ஒரு புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் என்றும் மேற்படி நபர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் இல்லையென பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த ஒலி நாடாவை வெளியிட்ட மற்றும் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சொகுசு கடைகளுக்கு செல்லும் முஸ்லிம்கள், அங்குள்ள பொருட்கள் மீது எச்சில் துப்புவதாகவும், அதனை நிரூபிக்க வீடியோ காட்சிகள் தம்மிடம் உள்ளதாகவும் குறித்த நபர் குறித்த அந்த ஒலிப்பதிவில் தெரிவித்திருந்தார்.
எனினும் அவை வெறும் வதந்தி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பொலிஸ் பிரதானியை வினவிய போது,
"இந்நாட்களில் சொகுசுக் கடைகள் எதுவும் திறக்கவில்லை. அதனால் முஸ்லிம்கள் மட்டுமின்றி எவருக்கும் கடைகளுக்கு செல்ல முடியாது. இது இனங்களுக்கு இடையிலான துவேஷ உணர்வை வளர்க்க வரையப்பட்ட ஒரு கதை.
அதனை நம்புவதற்காக வீடியோ உள்ளதாக மேலும் ஒரு கதையையும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக சிந்தித்தால் இது பகிரப்பட்டிருக்காது.
ஏதும் செய்திகள் கிடைத்தால் உண்மையா பொய்யா என உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
බුද්ධි අංශ තොරතුරක් ලෙස ව්යාජ හඬපයක් සමාජ මාධ්යයට මුදා හැරි පුද්ගලයා හඳුනාගෙන ඇතැයි පොලිස් නීති කොට්ඨාසය භාර නියෝජ්ය පොලිස්පති නීතීඥ අජිත් රෝහණ මහතා පැවසීය.
මුස්ලිම් වැසියන් හිතාමතා කොරෝනා බෝකරන බවට තම ප්රධානියා දැනුම් දුන්නේයැයි කියමින් හඬපට නිකුත් කළ පුද්ගලයා තමා බුද්ධි අංශ සාමාජිකයකු බව ඇඟවෙන පරිදි එම හඬපටය මුදා හැර තිබිණි. කෙසේ වෙතත් නියෝජ්ය පොලිස්පතිවරයා ප්රකාශ කළේ ඔහු බුද්ධි අංශ සාමාජිකයකු නොවන බවයි.
එම ව්යාජ තොරතුරු සහිත හඬපටය මුදාහැරි පුද්ගලයා මෙන්ම එය සමාජ මාධ්ය හරහා බෙදා හැරි පුද්ගයන් ද අත්අඩංගුවට ගැනීම කටයුතු කරන බව ද ඔහු කීවේය.
සුපිරි වෙළඳසල්වලට යන මුස්ලිම් වැසියන් රෝගය බෝ කිරීම සඳහා භාණ්වල කෙළ ගාන බවටත්, ඒ බව ඔප්පු කිරීමට වීඩියෝ පට තිබෙන බවටත් එම පුද්ගලයා හඬපටයක් මගින් ප්රකාශ කළ අතර එය සම්පූර්ණයෙන්ම අසත්යක් බව පොලිසිය කියයි.
මේ ගැන කළ විමසීමක දී පොලිස් ප්රධානියෙක් මෙසේ ප්රකාශ කළේය.
'මේ දවස්වල සුපිරිවෙළඳසල් ඇරලා නෑ. ඒ නිසා මුස්ලිම් නෙමෙයි කාටවත් සුපිරිවෙළඳසල්වලට යන්න බෑ. මේක මේ ජාතීන් අතර වෛරය පතුරුවන්න ගොතපු කතාවක්. ඒ බොරු කතාව ඇත්ත කියලා ඒත්තු ගන්වන්න තමයි වීඩියෝ කතාවකුත් කියන්නේ. මෙවැනි බොරු ප්රචාර විශ්වාස කරන්න එපා. බුද්ධිමත්ව හිතුවා නම් මේක කවුරුවත් ප්රචාරයර කරන්නේ නෑ. යමක් ලැබුණම ඒක ඇත්තද නැද්ද කියලා තාර්කිකව හිතන්න. ' යැයි එම පොලිස් ප්රධානියා කීවේය.
Credit: Media Lk
Translation: R.Rishma
Post a Comment