வெலிசர முகாமில் மரணமடைந்தவரின் உடல், சர்வதேச சட்டத்தின் கீழ் தகனம்
வெலிசர கடற்படை முகாமிற்கு சொந்தமான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்த வந்த கடற்படை அதிகாரி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
எனினும் உயிரிழந்த அதிகாரியின் உடலில் பெற்றுக் கொள்ளப்பட்ட இரத்த மாதிரிக்கமைய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என உறுதியாகியதாக இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் கமரான்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரி கடந்த 18ஆம் திகதி ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வெலிகர கடற்படை முகாமில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த கடற்படை அதிகாரிக்கு நீண்ட காலமாக சிறுநீரக பிரச்சினை காணப்பட்டுள்ள நிலையில், அவர் எலி காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார் வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு கடற்படை அதிகாரி உயிரிந்துள்ளார். இந்த கடற்படை சிப்பாய் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய் இருந்தமையினால் அவரது உடல் சர்வதேச தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தகனம் செய்யப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Corona Ella Eli katchchaluku sarwadesa Satyam erikanuma
ReplyDeleteஇதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் சர்வதேச சட்டம் அல்ல இலங்கையின் சட்டத்தின்படி
ReplyDelete