Header Ads



'பிளக் டீ' சிறந்த மருந்தாகும் - அமைச்சர் டொக்டர் ரொமேஷ் பத்திரன


(ஆர்.யசி)

இலங்கையின் ' பிளக் டீ' நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.

இதன் காரணத்தினால் இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில் கேள்வியை எழுப்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பத்திரன இதனை தெரித்தார்.

 அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பிரதான ஏற்றுமதியான தேயிலை, இறப்பர் என்பவற்றை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றது.

அதேபோல் தேசிய விவசாயத்தை பலப்படுத்த இப்போதே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். தொழ்ற்சாலைகளை மீண்டும் இயக்கவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றது. 

அதேபோல் எமது தேயிலைக்கான கேள்வியும் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் ' பிளக் டீ' நல்லதொரு மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகின்றது. சுகாதார பானமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் சூடான ' பிளக் டீ' அருந்துவதன் மூலம் நிமோனியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த முடியும். எனவே இது எமக்கான உற்பத்தியை ஏற்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. 

No comments

Powered by Blogger.