கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம், முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் பாராட்டு - பாரிஸ்
- இக்பால் அலி -
கொரொனா வைரஸின் பிடிக்குள் சிக்குண்ட நாட்டை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையில் அமைந்துள்ள அரசாங்கம் மிகவும் மதிநுட்பத்துடன் செயற்பட்டு கொரோனா தொற்றை துரித கதியில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எமது நாட்டு மக்கள் மத்தியிலும் மட்டுமல்ல வெளிநாட்டவர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களும் அமோக வரவேற்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளது என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் அமைப்பாளரும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளருமான ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் நாட்டில் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தும் தேவையான இடங்களை முடக்கியும் துரிகதியில் கொரேனா தொற்றை ஒரு கட்டுப்பாட்டுக்குள் அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு எமது நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டுகின்றமை என்பது வெளிப்படையான உண்மையே.
மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திவதிலும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையில் பிரதமர், சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் தீவிரமாக செயற்பட்டமையை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தி;ல் இதற்காக பங்;காற்றிய அனைத்து தரப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதில் நான்பெருமிதம் அடைகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.
18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு நேரங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதேவேளையில் ஏனைய மாவட்டங்களில் 22 ஆம் திகதி தளர்த்தப்பட்டு சில பிரிவுகளில் ஊரடங்கு அமுல் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் படிப்படியாக மக்களை இயல்பு வாழ்க்கை நிலைக்கு கொண்டு வருவதற்காக சிறந்த நோக்குடன் செயற்பட்டு வருகின்றது.
அரசாங்கம் இன்றைய நெருக்கடியான கால கட்டத்தில் சுகாதாரம் மற்றும் வைத்தியத் துறை விடயங்களில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே பொது மக்களின் அத்தியாவசியமான உணவுப் பொருட்களை அனைத்து மக்களுக்கும் குறைபாடுகளின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவை தவிர இன்னோரன்ன மக்களின் அத்தியாவசிமான மருந்து வகைகள் ,எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களை இலகுவாகப் பெற்றுக் கொடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டதை நாம் மறந்து விட முடியாது.
இன்றைய மக்களின் தேவையான விடயங்களை முகாமைத்துவம் செய்து அரசு தேசிய ரீதியில் சிறந்த முறையில் உணர்ந்து செயற்பட்டமைக்கு கண்டி மாவட்ட முஸ்லிம் மக்கள் சார்ப்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
19-04-2020
Nana
ReplyDeleteஇக்பால், பாரிஸ் நாநாக்கு சொல்லுங்க
ReplyDeleteகொரோனாவோட முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமும் பரவி வருகிறது என்று. பாவம் மனுசனுக்கு இதெல்லாம் விளங்காது.
nannane na , nannane na
ReplyDeleteபாரிஸ் ஹாஜி ரொமப நாளைக்கி அப்புறம் தேர்தல் பிரச்சாரம் பண்ண வந்தீங்க போல. ஏன்னா உங்களை கண்டு பல நாட்கள் ஆகிவிட்டது. முஸ்லீம் ஜனாஸாக்களை எரியூட்டும் போது உங்க சத்தேமே காணவில்லை. அரச வைத்திய சங்கத்தின் அறிக்கையை கூட நீங்க இன்னும் பார்க்க எல்லா போல. நீங்க பாராளுமன்றம் போய் சமூகத்துக்கு இன்னும் என்ன பன்ன போரிங்? அங்கு போயும் உங்க நண்பனுக்கு கோடி பிடிக்க போறிங்களா?
ReplyDelete