ஓமானில் பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு, உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு
கொரோணா காரணமாக முடக்கட்பட்டு தங்களின் தங்குமிடங்களில் தங்கியுள்ள ஓமான்- மஸ்கட் நகரில் வாழும், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி OL.அமீர் அஜ்வத் (நளீமி) தலைமையில் நேரில் சென்று விநியோகிக்கப்பட்டது
ஓமான் நாட்டுக்கான இலங்கை தூதரகம், ஓமானில் உள்ள இலங்கை சமூகக் கழகத்துடன் இணைந்து இந்நிவாரணத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது,
கொரோணா காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு இவ்வுதவிகள் சிறந்த நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
(மனாஸ் ஹுசைன்)
Post a Comment